Orange : சர்ச்சைகளும் சம்பவங்களும்! - தொடர்கின்றன..!!
10 ஆனி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 2630
ஊழியர்கள் தற்கொலை, mega நிறுவனத்தின் குடைச்சல் என பல சிக்கல்களில் சிக்கிக்கொண்ட Orange, மற்றுமொரு பெரிய தலைவலிக்குள் சிக்கிக்கொண்டது...
2009 ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று வாடிக்கையாளர்கள் இணைந்து Orange நிறுவனத்துக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுத்தனர்.
Orange நிறுவனம் <<எல்லையற்ற 3G இணையம்>> வழங்குவதாக விளம்பர் செய்திருந்தது. ஆனால் அதை வழங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு மாதத்துக்கு எந்த நேர அவகாசமும் இல்லாமல் 1GB டேட்டாவை பயன்படுத்தலாம் என அறிவிக்கவேண்டியதை, 'அன்லிமிட்டட் டேட்டா' என தவறுதலாக விளம்பரப்படுத்தி, சிக்கிக்கொண்டது.
இந்த சிக்கலில் இருந்து ஒருவழியாக சுதாகரித்துக்கொண்டதோடு, மீண்டும் 2011 ஆம் ஆண்டு துனிஷியாவில் ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கிக்கொண்டது.
அதேவருடத்தில், பிரான்சில் கடல்கடந்த மாவட்டங்களுக்கு (குறிப்பாக Réunion) முறையற்ற இணையம் வழங்கவில்லை என €27.6 மில்லிய்ன் யூரோக்கள் தண்டப்பணம் செலுத்த பணிக்கப்பட்டது.
அதேவருடம், ஜனவரி 1 ஆம் திகதியில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களுக்கு (SMS) முன்னறிவித்தல் இன்றி இரண்டுமடங்கு கட்டணம் அறவிட்டு மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியது.
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பிரித்தானியாவில் மிக மோசமாக இணைய சேவை வழங்கி சர்ச்சைக்குள் சிக்கியது.
இதுபோல் கடந்த காலங்களில் 'வர்ரவன் போறவன் எல்லாம் அடிக்குறாய்ங்களே?' என்பது மாதிரி பலத்த இரத்தக்காயங்களை சந்தித்துள்ளது Orange நிறுவனம்.