Paristamil Navigation Paristamil advert login

காளான் சுக்கா

காளான் சுக்கா

13 கார்த்திகை 2024 புதன் 15:04 | பார்வைகள் : 128


சைவ உணவுப் பிரியர்களுக்கு காளான் விருப்பமான உணவு. அசைவ பிரியர்களும் காளானை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்தவகையில் இந்த காளான் சுக்காவை சப்பாத்திக்கு செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான அளவு

காளான் - 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 3
சின்ன வெங்காயம் - 10
மல்லி தூள் - 1/4 tbs
மிளகாய் தூள் - 1/2 tbs
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

பொடி அரைக்க

சோம்பு - 1/4 tsp
மிளகு - 1/4 tsp
சீரகம் - 1/4 tsp


செய்முறை :

முதலில் பொடி அரைக்க சோம்பு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை ஜாரில் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். பட்டை கிராம்பு, ஏலக்காய் , சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் 2 பெரிய வெங்காயம் மற்றும் 10 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குகள்.

பொன்னிறமாக வந்ததும், காளான் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். தண்ணீர் ஊற்றாமல் கிளற வேண்டும். காளானில் இருக்கும் தண்ணீர் பிரிந்து வரும். அப்போது காளான் கொஞ்சம் சுருங்க ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து தட்டு போட்டு மூடிவிடுங்கள். 5 நிடத்திற்கு நன்கு வெந்துவிடும்.

இறுதியாக அரைத்த பொடியை சேர்த்து 1 நிமிடத்திற்கு நன்கு கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் காளான் சுக்கா தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்