Paristamil Navigation Paristamil advert login

திருமணம் செய்துகொள்ள சரியான வயது எது..?

திருமணம் செய்துகொள்ள சரியான வயது எது..?

13 கார்த்திகை 2024 புதன் 15:12 | பார்வைகள் : 573


திருமணம் என்பது கமிட்மெண்ட் என்பதை தாண்டி நம் வாழ்க்கையின் பயணத்தை அழகாக மாற்றக்கூடிய ஒரு பந்தம். அதேசமயம் திருமணத்தை சரியான வயதில் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் பார்ட்னரை புரிந்துகொள்ளும் பக்குவம், கையாளும் பக்குவம் இருக்கும். ஒருவரை புரிந்துக்கொள்ளும் மெச்சூரிட்டி எப்போது வருகிறதோ அப்போதுதான் நீங்கள் திருமணம் செய்துகொள்ள தகுதியானவர்.

 இப்படி எந்தவொரு புரிதலும் இல்லாமல் திருமணம் செய்தால் அடிக்கடி சண்டைகள் வந்து பிரிவில் கொண்டு போய் சேர்த்துவிடும். சரி.. திருமணம் செய்துகொள்ள சரியான வயது எது..? இந்த கேள்விக்கும் இன்றுவரை முடிவான பதில் கிடையாது. அதேசமயம் முன்பே சொன்ன பக்குவமும் , புரிதலும் வயது மட்டுமன்றி, அனுபவத்தாலும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

 இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு நுபுர் தாகேபால்கர், (மனநல மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவ உளவியலாளர்) கொடுத்த பேட்டியில் “ வயது அடிப்படையில் இதற்கு பதில் கிடையாது. ஆனால் உணர்ச்சிகளாலும் , தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் , நிதி நிலமையிலும் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள் எனில் அவர்கள் திருமணத்திற்கு தயாரானவர்களாக கருதப்படுகிறது.

 துணையை புரிந்துக்கொள்ளும் பக்குவமும், துணையின் தேவையை பூர்த்தி செய்ய தயாராக இருக்கும் நபர்கள் இருவரும் சேர்ந்து அழகான வாழ்க்கையை கட்டமைக்க சீரான இலக்குகளை கொண்டிருக்கிறார்கள் எனில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி நிலையான புரிதல், தனிப்பட்ட இலக்குகள், சமூகத்துடன் ஒன்றி வாழும் திறன், நெருக்கடியான சூழ்நிலையையும் கையாளும் பக்குவம், நேர்மையான செயல்கள், தொடர்பு திறன் ஆகிய விஷயங்களும் இருவருக்குள்ளும் இருக்க வேண்டும்.

 இவை இரண்டும் அவர்களிடம் உள்ளது எனில் அவர்கள் தாராளமாக திருமணம் செய்துக்கொள்ள தகுதியானவர்கள் என்கிறார். இந்த அனைத்து விஷயங்களும் குறிப்பிட்ட வயதில்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு 26 வயதிலேயே வந்துவிடும். சிலருக்கு 30 வயதிற்கு மேல் வரலாம். எனவே வயது அடிப்படையில் ஒருவர் திருமணம் செய்ய தகுதியானவர் என சொல்ல முடியாது. எந்த வயதில் பக்குவப்படும் நிலையை எட்டுகிறார்களோ அப்போதுதான் திருமணம் குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்கிறார்.

20-களில் திருமணம் செய்யும் சில தம்பதிகளுக்கு சரிசமமான அனுகுமுறை இருக்கும். தொடர்பு திறன் அதிகமாக இருக்கும். இருவரும் சேர்ந்து வாழ்க்கைக்கான அடித்தளத்தை உருவாக்குவார்கள். வாழ்க்கையின் அடுத்தக்கட்ட மாற்றங்களை இணைந்தே சந்திக்கும் அழகை பெறுவார்கள். அதேசமயம் அவர்களுக்கு சுய வளர்ச்சி, தனக்கான சரியான கரியரை அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அழுத்தம் இருக்கும். அவர்களுக்கு தனிப்பட்ட முன்னுரிமைகள் அதிகரித்துவிடும். இதனால் சில நேரங்களில் சண்டைகள் வரலாம். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொண்டு பக்குவமாக கடந்து செல்லும் தம்பதிகளே வெற்றியடைகிறார்கள்.

30, 40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்கிறார்கள் எனில் அவர்கள் தன் தனிப்பட்டை நிதி நிலைமையில் முன்னேறி இருப்பார்கள். கரியரை சரியாக அமைத்து வைத்திருப்பார்கள். அதேசமயம் அனுபவங்கள் மூலம் சில புரிதல்கள் இருக்கும். இலக்கு இருக்கும். எனவே இவை அனைத்தையும் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்த துணை நிற்கும் துணை அந்த வாழ்க்கை அழகாக நகறும். குறிப்பாக 30க்கு மேல் திருமணம் செய்யும்போது எமோஷ்னலாகவும், ஃபினான்ஷியலாகவும் ஸ்டேபிலாக இருப்பார்கள். அதுவே அந்த திருமண வாழ்க்கையை சண்டை சச்சரவுகள் இன்றி கொண்டு செல்லும் என்கிறார் நுபுர் தாகேபால்கர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்