Paristamil Navigation Paristamil advert login

Orange : சர்ச்சைகளும் சம்பவங்களும்! (பகுதி 2)

Orange : சர்ச்சைகளும் சம்பவங்களும்! (பகுதி 2)

6 ஆனி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18150


சீனாவின் ஹொங்கொங் நகரில் இருந்து இயங்கிய 'Mega Upload' இணையத்தளம் பெரும் சர்ச்சைக்குள் சிக்கியது. 
 
இணைய சேமிப்புவழங்கியான Megaupload நிறுவனத்துக்கு 2011 ஆம் ஆண்டில் அதிகளாவன வாடிக்கையாளர்கள் இருந்தனர். பிரான்சில் இருந்து அதை பயன்படுத்திய பயனாளிகள், தங்களது தரவுகள் இணையத்தில் பதிவேற்றமாகவில்லை என 2011 ஆம் ஆண்டில் பெருத்த் கண்டன குரல்கள் எழுப்பினர். 
 
இதை விசாரித்த Megaupload நிறுவனம், Orange சேவையினை பயனடுத்தி தரவேற்றியவர்களுக்கு மாத்திரம் இந்த பிரச்சனை ஏற்பட்டதை தெரிந்துகொண்டனர். 
 
பின்னர், 'நிலையான, போதுமான இணைய சேவையினை Orange நிறுவனம் வழங்கவில்லை!' என குற்றம் சாட்டியது. 
 
இதில் ஓரளவு உண்மை இருந்தபோதும், அதை Orange மறுத்தது. 
 
இருந்தபோதும் அது Megaupload நிறுவனத்தின் பிரச்சனை என தெரிவிக்கப்பட்டு, அதற்கு அடுத்த வருடமே அமெரிக்காவினால் தடையும் செய்யபட்டது. 
 
அந்த சர்ச்சையில் Orange நிறுவனத்துக்கு பல வாடிக்கையாளர்கள் இழப்பு ஏற்பட்டது. பலத்த சர்ச்சைக்குள்ளும் சிக்கிக்கொண்டது. 
 
சர்ச்சைகள் தொடரும்...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்