Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ்-இஸ்ரேல் போட்டி.. வரலாறுகாணாத பார்வையாளர்கள் வீழ்ச்சி..!

பிரான்ஸ்-இஸ்ரேல் போட்டி.. வரலாறுகாணாத பார்வையாளர்கள் வீழ்ச்சி..!

14 கார்த்திகை 2024 வியாழன் 08:06 | பார்வைகள் : 5731


Stade de France மைதானத்தில் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற உள்ள உதைபந்தாட்ட போட்டியைக் காண வரலாறுகாணாத அளவு மிகக்குறைந்த பார்வையாளர்களே வருகை தர உள்ளனர்.

80,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில் இடம்பெற உள்ள போட்டிக்கு, இதுவர்நி 20,000 இற்கும் குறைவானவர்களே  முன்பதிவு செய்துள்ளனர். இது முன்னர் எப்போதும் பதிவாகாத மிகக்குறைந்த அளவு பார்வையாளர்களாகும்.

முன்னதாக 2003 ஆம் ஆண்டில் பிரான்ஸ் -நியூசிலாந்து அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியினை 36,842 பேர் பார்வையிட்டிருந்தனர். இதுவே இந்த மைதானத்தில் பதிவான மிகக்குறைந்த பார்வையாளர் எண்ணிக்கையாகும்.


இஸ்ரேல் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், போட்டியைக் காண ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ள உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்