அசத்தலான தோற்றத்துடன் வெளியாகவிருக்கும் புதிய Honda Amaze
14 கார்த்திகை 2024 வியாழன் 09:09 | பார்வைகள் : 156
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் மூன்றாம் தலைமுறை Amaze செடான் காரின் டிசைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகமான X-இல் பகிரப்பட்ட படம் சப்காம்பாக்ட் செடானின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உட்புற வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் புதிய முன்புற தோற்றம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரும்.
புதிய தலைமுறை Honda Amaze-ன் விலை ரூ.7.50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது புதிய தலைமுறை Maruti Dzire காருக்கு போட்டியாக இருக்கும். இது தவிர, Tata Tigor மற்றும் Hyundai Aura ஆகியவற்றுடனும் போட்டியிடும்.
எலிவேட் போன்ற நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்டுகள் கிடைக்கும்
ஹோண்டா வெளியிட்டுள்ள ஸ்கெட்ச்களின்படி, வரவிருக்கும் ஹோண்டா அமேஸின் தோற்றம் புதிய Honda City மற்றும் சர்வதேச மாடல் Honda Accord ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளது.
அமேஸின் முன்புறத்தில் கூர்மையான ஸ்டைலிங் கோடுகள் மற்றும் hexagonal grille உள்ளது. இது இருபுறமும் LED DRLகளுடன் நேர்த்தியான LED ஹெட்லைட்களைப் பெறுகிறது, அவை Honda Elevate SUV போல தோற்றமளிக்கின்றன.
அதே நேரத்தில், fog lamps அவற்றின் இடத்தில் உள்ளன. மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், நேர்த்தியான எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ஹோண்டா சிட்டி அளவுக்கு உயரமான பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
புதிய தலைமுறை அமேஸ் காரின் கேபினின் ஸ்கெட்ச்சையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது. இது ஒரு புதிய டாஷ்போர்டு தளவமைப்பு மற்றும் புதிய கேபின் தீம் ஆகியவற்றைப் பெறுகிறது, இது City Sedan மற்றும் Elevate SUV-யால் ஈர்க்கப்பட்டது.
கேபினின் உள்ளே, கருப்பு மற்றும் பழுப்பு நிற தீம் கொண்ட 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலைக் கண்டுள்ளது. டேஷ்போர்டில், இது பேட்டர்ன் டிரிம் செருகல்களுடன் free-standing touchscreen-ஐ பெறுகிறது.
வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் single-pane sunroof போன்ற புதிய அம்சங்களை அமேஸ் பெறலாம். 6 airbags standard, Electronic Stability Control (ESC), rear view camera with Advanced Driving Assist System (ADAS).ஆகியவையும் பாதுகாப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளன.
மெக்கானிக்கல் மாற்றங்கள் ஹோண்டா அமேஸில் அரிதாகவே காணப்படுகின்றன. இந்த கார் தற்போது 1.2 லிட்டர் i-VTEC நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது, இது 87.7hp ஆற்றலையும் 110Nm டார்க்கையும் உருவாக்குகிறது.
டிரான்ஸ்மிஷனுக்கு, இந்த இயந்திரம் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் விருப்பத்தைப் பெறுகிறது. அமேஸ் நிறுவனம் டீசல் என்ஜின்களைத் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால், பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வரும். இந்த கார் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.