Orange - சர்ச்சைகளும் சம்பவங்களும்..!!
4 ஆனி 2019 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 18808
என்னதான் பிரான்சின் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு சேவையாக இருந்தாலும், Orange பல இங்களில் சிக்கி சின்னாபின்னமாவது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிவித்தது போல், 2008 ஜனவரியில் இருந்து 2011 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் 60 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2008-2009 இந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 25 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் விட்டுச்சென்ற கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களை ஆராய்ந்து 'வேலையில் இருந்த அழுத்தம் காரணமாக' இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரிடம் பணி குறித்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. 102,843 ஊழியர்களில் 80,080 பேர் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். அவர்களில் 77.9 வீதமானவர்கள் தாம் ஆரோக்கியமாக உணரவில்லை என்பதையும், மிக குறைவான பொது உணர்வை கொண்டுள்ளதையும், மன அழுத்தத்தை கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
தொழிற்சங்க ஊழியர்கள் பெரும் நெருக்கடியை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் முன்னாள் துணை CEO Louis-Pierre தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்த வழக்கு இன்று வரை விசாரணைகளிலேயே உள்ளது. தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
தற்போது தற்கொலைகள் தொடரவில்லை என்றபோதும், விசாரணை நிலுவையில் தான் உள்ளது.
இது மட்டுமே Orange நிறுவனத்தின் மீதான சர்ச்சை இல்லை. இன்னும் உள்ளது.
- நாளை!