இலங்கை தேர்தல் - வாக்களிப்பு நிலைய கழிவறையிலிருந்து சடலம் மீட்பு
14 கார்த்திகை 2024 வியாழன் 10:31 | பார்வைகள் : 11447
கொபேகனே, பனாம முஸ்லிம் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கழிவறைக்குள் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளராக கடமையாற்றிய ஏ.எம்.அஸீம் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட நிக்கவெரட்டிய நீதவான் சந்தன லியனகே சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த குணவர்தன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமின குமார ஆகியோரின் பணிப்புரைக்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபேகனே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார மேற்கொண்டு வருகின்றார்.பதிவாகி உள்ளன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan