Paristamil Navigation Paristamil advert login

Vitry-sur-Seine : இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்!

Vitry-sur-Seine : இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்!

14 கார்த்திகை 2024 வியாழன் 12:20 | பார்வைகள் : 13507


இளம்பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Vitry-sur-Seine (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை மாலை 6.15 மணி அளவில் Vitry-sur-Seine நகர காவல்நிலையத்துக்கு தனது நண்பர்களுடன் வருகை தந்த இளம்பெண் ஒருவர், பாலியல் பலாத்கார புகார் இன்றை அளித்துள்ளார்.

rue Watteau வீதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வைத்து நபர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், அதன் பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்த காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்