Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேர்தல் முடிவுகள்: வெளியிடப்படும் விதம்

இலங்கையில் தேர்தல் முடிவுகள்: வெளியிடப்படும் விதம்

14 கார்த்திகை 2024 வியாழன் 13:28 | பார்வைகள் : 645


10ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, 7.15க்கு பிறகு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க, தேர்தல் முடிவுகள் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் தேர்தல் ஆணைக்குழுவில் அவை மீள்பரிசீலனை செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

குறிப்பாக மூன்று தடவைகள் இந்த முறைமைகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியிடப்படும்.

அதன்பிறகு, மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும், அதனுடன், ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முடிவுகள் வெளியானவுடன் ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களிலும் விருப்பு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

எவ்வாறாயினும், ஆசனங்களை வென்ற அல்லது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வாக்குகளே எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் மண்டப வளாகத்தில் இருந்து வௌியேற்றப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்