Paristamil Navigation Paristamil advert login

திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் !

திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் !

14 கார்த்திகை 2024 வியாழன் 13:39 | பார்வைகள் : 2785


இயக்குனர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவான ’பிளடி பெக்கர்’ என்ற திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தயாரிப்பாளர் நெல்சன், விநியோகஸ்தருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கவின் நடிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான ’பிளடி பெக்கர்’ திரைப்படத்தை, இயக்குனர் நெல்சன் தயாரித்திருந்த நிலையில், இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளி தினத்தில் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலையில், அதே தினத்தில் வெளியான ’அமரன்’ மற்றும் ’லக்கி பாஸ்கர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் காரணமாக, சில நாட்களில் திரையரங்குகளில் இருந்து இந்த படம் தூக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த 5 ஸ்டார் செந்திலுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால், தயாரிப்பாளர் நெல்சன் அவருக்கு நஷ்ட ஈடு கொடுத்ததாகவும், இது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிகிறது.

’பாபா’ உள்பட சில படங்கள் தோல்வி அடைந்தபோது, ரஜினிகாந்த் இதே போல் பணத்தை திருப்பி கொடுத்ததாகவும், அதேபோல் நெல்சனும் பணத்தை திருப்பி கொடுத்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு பரவியிருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்