Paristamil Navigation Paristamil advert login

Orange S.A - சில 'அடடா' தகவல்கள்!!

Orange S.A - சில 'அடடா' தகவல்கள்!!

3 ஆனி 2019 திங்கள் 14:31 | பார்வைகள் : 17655


பிரான்சின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனரான Orange S.A. குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் சில அடடா தகவல்களை பார்க்கலாம்..!!
 
256 : உலகம் முழுவதும் இயங்கும் இந்த நிறுவனத்திற்கு தற்போது 256 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 
 
95,000 : பிரான்சில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 95,000.
 
11 : உலகில் உள்ள மிகச்சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் Orange S.A நிறுவனத்திற்கு பதினோராவது இடம். 
 
4 : ஐரோப்பாவில் உள்ள மிகச்சிறந்த தொலைத்தொடர்பு பட்டியலில் இதற்கு நான்காவது இடம். 
 
40 : 2015 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 40 பில்லியன் யூரோக்களை வருவாயாக ஈட்டியது. 
 
17.9 : Orange S.A நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கலில், பிரான்சில் உள்ள வாடிக்கையாளர்கள் வீதம் 17.9. 
 
29 : Orange S.A நிறுவனம் சேவைகள் வழங்கும் நாடுகளின் மொத்த எண்ணிக்கை 29. பிரெஞ்சுத்தீவான Réunion ஐயும் சேர்த்துக்கொண்டால் மொத்தம் 30. 
 
60 : இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். ஜனவரி 2008 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல் 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தற்கொலை செய்துகொண்ட Orange S.A ஊழியர்களின் எண்ணிக்கை. 
 
Orange S.A நிறுவனம் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் சிறப்பான தரமான தகவல்களை தெரிந்துகொண்டோம். ஆனால் இதே நிறுவனம் மிக பெரிய சர்ச்சைகளுக்கும் சொந்தமான நிறுவனம். அதை நாளை பார்க்கலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்