Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : ஆசிரியர் மீது தாக்குதல்.. மாணவி கைது!!

Hauts-de-Seine : ஆசிரியர் மீது தாக்குதல்.. மாணவி கைது!!

14 கார்த்திகை 2024 வியாழன் 19:34 | பார்வைகள் : 5965


ஆசிரியர் ஒருவரை தாக்கிய காரணத்திற்காக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Colombes (Hauts-de-Seine) நகரில் உள்ள Claude Garamont உயர்கல்வி பாடசாலையில் (லீசே) பயிலும் மாணவி ஒருவர், அவரது ஆசிரியரை உடல்ரீதியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் 13, புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு குறித்த மாணவியைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை அடுத்து, ஆசிரியர்கள் சங்கம் நீதி கேட்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்