Google Maps-இல் காற்று தர குறியீட்டு அம்சம் அறிமுகம் - எவ்வாறு பயன்படுத்துவது?

15 கார்த்திகை 2024 வெள்ளி 08:08 | பார்வைகள் : 2995
Google Maps-யில் நிகழ்நேர காற்று தரத்தின் தகவல்களை வழங்கும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Google நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது Google Maps இல் உண்மையான நிகழ் நேர காற்று தரத்தின் தகவல்களை வழங்கும் காற்று தர குறியீட்டு (AQI) ட்ராக்கரை Google அறிமுகப்படுத்துகிறது.
ஏற்கனவே 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது இந்திய பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
குளிர்காலம் நெருங்கி வருவதால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது.
Google Maps பயன்பாட்டில் நேரடி புதுப்பிக்கப்பட்ட காற்று தர தகவல்களை அணுகுவதன் மூலம், பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பாதுகாத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
படி 1: உங்கள் சாதனத்தில் Google Maps இன் சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
படி 2: தேவையான இடத்தின் பெயரை தேடல் பட்டியில் உள்ளிடவும்.
படி 3: தேடல் பட்டியின் கீழே உள்ள லேயர் ஐகானை (ஒரு அடுக்கு சதுரங்கள்) தட்டவும்.
படி 4: கிடைக்கும் விருப்பங்களில் இருந்து "காற்று தரம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பச்சை: பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான காற்று தரம்
மஞ்சள்: மிதமான காற்று தரம்
ஆரஞ்சு: உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது
சிவப்பு: அனைவருக்கும் ஆரோக்கியமற்றது
ஊதா: மிகவும் ஆரோக்கியமற்ற காற்று
கருஞ்சிவப்பு: ஆபத்தான காற்று, கடுமையான சுகாதார அபாயங்களைத் ஏற்படுத்துகிறது
வரைபடத்தில் எங்கும் தட்டினால், பயனர்கள் அந்த குறிப்பிட்ட பகுதியின் AQI ஐக் காணலாம்.