Paristamil Navigation Paristamil advert login

கம்பீர் என் மீது வெறுப்பை வீசியுள்ளார் - ரிக்கி பாண்டிங் காட்டமான பதிலடி

கம்பீர் என் மீது வெறுப்பை வீசியுள்ளார் - ரிக்கி பாண்டிங் காட்டமான பதிலடி

15 கார்த்திகை 2024 வெள்ளி 08:12 | பார்வைகள் : 140


கம்பீர் நான் கூறிய கருத்தின் இரண்டாம் பகுதி பற்றி பேசவில்லை என அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார். 

விராட் கோஹ்லியின் பார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளதாக அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) கருத்து தெரிவித்தார்.

பாண்டிங் கூறியதை குறிப்பிட்டு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "முந்தைய நாளில் நான் விராட் கோஹ்லியின் தற்போதைய பார்ம் கவலையை கொடுப்பதாக நான் கூறியிருந்தேன். கோஹ்லியின் செயல்பாடுகளை கடந்த 5 ஆண்டுகளில் படித்து, அதனை மிகவும் தெளிவுடன் கூறினேன். 

அவுஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவதை விரும்பும் கோஹ்லி இங்கே நல்ல சாதனைகளை வைத்துள்ளார். எனவே அவர் பார்முக்கு திரும்ப இதுவே நல்ல வாய்ப்பு என்று நான் கூறியிருந்தேன். 

ஆனால் கம்பீர் நான் கூறிய கருத்தின் இரண்டாவது பகுதியை பற்றி பேசவில்லை. நியூஸிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிரடியாக பேசினார்.

அப்படி அதிரடியாக பேசுவதில் எங்களுக்கு கொஞ்சம் வரலாறு இருக்கிறது. ஆனால் கம்பீர் இந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டு என் மீது வெறுப்பை வீசியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.    
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்