தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய 6 வீரர்கள் மரணம்
15 கார்த்திகை 2024 வெள்ளி 08:34 | பார்வைகள் : 274
காசா மீது தொடங்கப்பட்ட போர் தற்பொழுது லெபனானிலும் இடம்பெற்று வருகின்றது.
தெற்கு லெபனான் பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஈரான் ஆதரவு படையினரான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான போர் தாக்குதலில் இறங்கியதை அடுத்து இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தெற்கு லெபனான் பகுதியில் நடந்த சண்டையில் 6 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவ படை புதன்கிழமை இரவு அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட 6 இஸ்ரேலிய ராணுவ வீரர்களும் Golani படைப்பிரிவின் 51வது பட்டாலியனை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 6 இஸ்ரேலிய ராணுவ வீரர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் Sderot பகுதியை சேர்ந்த 21 வயது சார்ஜெண்ட் Shalev Itzhak Sagron, Kochav Ya'ir பகுதியை சேர்ந்த 22 வயது கேப்டன் Itay Marcovich, Mehola பகுதியை சேர்ந்த 21 வயது சார்ஜெண்ட் Sraya Elboim Gan Haim பகுதியை சேர்ந்த 20 வயது சார்ஜெண்ட் Dror Hen, Dimona பகுதியை சேர்ந்த 20 வயது சார்ஜெண்ட் Nir Gofer என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 6வது இஸ்ரேலிய ராணுவ வீரர் Nahariya பகுதியை சேர்ந்த 19 வயது Yoav Daniel என்று பின்னதாக இஸ்ரேலிய ராணுவ படை உறுதிப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானின் பகுதியில் 4 ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருந்த இடத்திற்குள் நுழைய முயன்ற போது நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாக IDF தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களின் படி, அக்டோபர் 7ம் திகதி தாக்குதலில் இருந்து இதுவரை 792 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், இதில் 373 பேர் தரைவழி தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு கொல்லப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.