Paristamil Navigation Paristamil advert login

Saint-Michel-sur-Orge : கத்திக்குத்தில் 20 வயது இளைஞன் பலி! - ஐவர் கைது!

Saint-Michel-sur-Orge : கத்திக்குத்தில் 20 வயது இளைஞன் பலி! - ஐவர் கைது!

15 கார்த்திகை 2024 வெள்ளி 17:12 | பார்வைகள் : 6009


20 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Michel-sur-Orge (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு சிலரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆறாவது நபர் தப்பி ஓடியுள்ளதாக அறிய முடிகிறது.



 

வர்த்தக‌ விளம்பரங்கள்