பிரேஸிலில் இரு குண்டு வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி

16 கார்த்திகை 2024 சனி 08:09 | பார்வைகள் : 4887
பிரேஸில் உச்சி நீதிமன்ற வளாகத்தில் இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இரவு 7.30மணியளவில் இந்த குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காரில் குண்டு வெடித்துள்ளதாகவும், அதன் பின்னர் மனித வெடிகுண்டாக மாறிய நபரொருவர் உச்சநீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற வேளை பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும், இதனையடுத்து அந்நபர் குண்டுகளை வெடிக்க செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அந்த நபர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1