Ind vs SA 4th T20I: வரலாறு படைத்த இந்திய அணி., திலக் வர்மா, சஞ்சு சாம்சன் சாதனை சதம்
16 கார்த்திகை 2024 சனி 09:44 | பார்வைகள் : 123
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 283 ஓட்டங்களை எடுததுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் எந்த அணியும் அடிக்காத அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்திய அணியின் இளம் பேட்டர்களான திலக் வர்மா 120 ஓட்டங்களுடனும், சஞ்சு சாம்சன் 109 ஓட்டங்களுடனும் இரண்டு சதங்களை விளாசினர்.
திலக் வர்மா தொடர்ச்சியாக இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்துள்ளார்.
அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் ஒரு வருடத்தில் 3 டி20 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சாம்சன் - திலக் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இது இந்தியாவுக்கு மிகப்பாரிய பார்ட்னர்ஷிப் எண்ணிக்கையாகும்.
அதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் 2 வீரர்கள் சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். டி20 வடிவத்தில் இது மூன்றாவது முறையாக நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சார்பில் லுத்தோ சிபம்லா அபிஷேக் ஷர்மாவின் ஒற்றை விக்கட்டை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி களமிறங்கி விளையாடிவருகிறது.