Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம்!!

சிறுவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம்!!

16 கார்த்திகை 2024 சனி 18:13 | பார்வைகள் : 6278


குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து இன்று பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் Place de la Nation பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நவம்பர் 16, சனிக்கிழமை இடம்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 500 வரையானவர்கள் இதில் கலந்துகொண்டனர். சிறுவர்கள் மீது குடும்பங்களில் உடல்ரீதியான தாக்குதல்களும், உளரீதியான தாக்குதல்களும் இடம்பெற்று வருவததாகவும் தெரிவித்து, இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்சில் ஆண்டுக்கு, 18 வயதுக்கு கீழுள்ள 130,000 சிறுமிகளும், 30,000 சிறுவர்களும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாகவும், ஆண்டுக்கு 4,000 சிறுவர்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்