2025யில் அதிகரிக்கப்போகும் செல்போன் விலை...? வெளியான தகவல்
17 கார்த்திகை 2024 ஞாயிறு 07:03 | பார்வைகள் : 157
அடுத்த ஆண்டு செல்போன்களின் விலை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் தேவை இன்றியமையாததாக உள்ள நிலையில் அவற்றின் விலையும் கணிசமான அளவில் உள்ளது.
AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5G நெட்வொர்க்கிங் வருகையின் செலவு அதிகரிப்பால் 2025ஆம் ஆண்டில் செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரீமியமயமாக்கல் என்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 2024யில் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய சராசரி விற்பனை விலை 2025யில் 5 சதவீதம் அதிகரிக்கும் என்று மார்க்கெட் அவுட்லுக் அறிக்கை தெரிவித்துள்ளது.
மக்கள் தற்போது அதிக சக்திவாய்ந்த ப்ராசஸர்கள் மற்றும் AI கொண்ட அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்களை வாங்க முக்கியத்துவம் கொடுப்பதும் விலையுயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Generative AI காரணமாக நல்ல ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் இந்த அம்சங்களை விரும்புவதால், அதிக சக்திவாய்ந்த CPU, NPU மற்றும் GPU ஆகியவற்றைக் கொண்ட சிப்களை உருவாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.