Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் -  43,799 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் -  43,799 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

17 கார்த்திகை 2024 ஞாயிறு 08:47 | பார்வைகள் : 2775


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 43,799 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 13 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேல் மீது ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

வடக்கு காஸாவில் ஹமாஸ் மீண்டும் ஒருங்கிணைவதைத் தடுப்பதாக உறுதியளித்த இஸ்ரேல், இந்த ஆண்டு ஒக்டோபரில் அப்பகுதியில் பாரிய வான் மற்றும் தரைத் தாக்குதலைத் தொடங்கியது.  

இந்த நிலையில், காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 43,799 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது.

மேலும், போர் தொடங்கியதில் இருந்து காஸா பகுதியில் 103,601 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் முந்தைய 24 மணிநேரத்தில் 35 இறப்புகள் அடங்கும். 

இதற்கிடையில், காஸாவின் ஜபாலியா மற்றும் பெய்ட் லாஹியா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ராஃபா பகுதியில் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான தாக்குதல்தாரிகளை ஒழித்து, பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களை தகர்த்து, ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        
 

வர்த்தக‌ விளம்பரங்கள்