தொழிலாளர்களைத் தாக்கும் செனட்சபைத் தலைவர்!!

17 கார்த்திகை 2024 ஞாயிறு 09:58 | பார்வைகள் : 6116
தொழிலாளர்களின் வருமானத்தில் கைவைக்கும் திட்டமொன்றை செனட்சபையின் தலைவர் ஜெரார் லார்சே (Gérard Larcher) முன்மொழிந்துள்ளார்.
தொழிலாளர்களின் வருமானத்தில் 7 மணித்தியால ஊதியத்தினை அரசாங்கத்திற்கு வழுங்கும் திட்டமே இது.
அதாவது ஒரு தேசிய விடுமுறை நாளை இரத்துச் செய்வதன் மூலம், அந்த நாளின் வருமானத்தை அரசிற்கு நிறுவனங்கள் வழங்குவதன் மூலம், தேசிய மருத்துவன் காப்பீடான Sécurité sociale இன் நட்டமான 2.5 பில்லியன் கடனை ஈடுசெய்ய முடியும் என ஜெரார் லார்சே தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வருடாந்தப் பாதீட்டினை (Budget) நிறைவேற்றத் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இவர் இந்தத் திட்டத்தினை முன்மொழிந்துள்ளார்.
மக்ரோன் அரசாங்கம் மிகவும் மோசமான நிலையில் நாட்டைக் கொண்டு செல்லமுடியாமல் திணறுவதுடன், உக்ரைனிற்காக பெரும் தொக நிதியை வீணடித்து, மக்களின் கொள்வனவுத் திறனை மேசமாக்கியிருக்கும் நிலையில், மக்களின் ஊதியத்தில் கைவைக்கும் இந்த சட்ட முன்மொழிவு மோசமான நிலைக்கே வழிவகுக்கும்.