Villeneuve-Saint-Georges : அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் சுட்டுக்கொலை!!
17 கார்த்திகை 2024 ஞாயிறு 11:17 | பார்வைகள் : 13439
கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இன்று நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இருந்து காலை 6 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்து, 'அல்லா அக்பர்' என கோஷமிட்டுக்கொண்டு அங்கிருப்பவர்களை அச்சுறுத்திக்கொண்டு இருந்துள்ளார்.
துப்பாக்கியை வீசிவிட்டு சரணடையும்படி அவரை காவல்துறையினர் பணித்தனர். ஆனால் அதனையும் மீறி அவர் துப்பாக்கியை இயக்க முயற்சித்ததால், அவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan