ஊட்டச்சத்து நிறைந்த இட்லி
17 கார்த்திகை 2024 ஞாயிறு 14:41 | பார்வைகள் : 116
தென்னிந்திய உணவு வகைகளைப் பொறுத்தவரை, தோசைக்குப் பிறகு பெரும்பாலானோருக்கு இட்லி சாம்பார்தான் முதலிடம். அனைவருமே காலையில் பெருமை சாப்பிடும் ஒரு சிறந்த உணவாக இட்லி விளங்குகிறது. இதனை எப்படி ஊட்டச்சத்து இட்லிகளாக செய்து சாப்பிடலாம் என இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உரித்த பச்சை வேர்க்கடலை 6 கப்,
பச்சரிசி 1 கப்,
புழுங்கல் அரிசி 1கப்,
துவரம் பருப்பு 1 கப்,
உளுத்தம் பருப்பு 1 கப்,
கடலைப்பருப்பு 1 கப்
பயிற்றம்பருப்பு 1 கப்,
வெள்ளை மூக்குக்கடலை 1 கப்,
வெள்ளை மொச்சை 1 கப்,
வெள்ளை காராமணி 1 கப்,
சோயா 1 கப்,
வெல்லம் 1 கட்டி,
பெரிய தேங்காய் 2,
முந்திரி திராட்சை தேவையான அளவு.
இனிப்பு இட்லி செய்முறை: முதலில் எல்லா பயிறு வகைகளையும் ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பயிர் வகைகளை, அரிசியையும் சேர்த்து ஊறவைத்து, எல்லா பொருட்களையும் தேங்காய் துருவலுடன் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதனை கரகரவென்று நெய் பதத்தில் எடுத்து உப்பு சேர்த்து இட்லித்தட்டில் ஊற்றி, வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி திராட்சையைப் போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பாதி இட்லியை உதிர்த்து வெல்லம் சேர்த்து கலந்து கடாயை கிளறவேண்டும். கிளறக்கிளற வெல்லம் கலந்து பாகு வாசனை வரும் அதுவரை நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு நெய் ஒரு ஸ்பூன், ஏலக்காய் சுக்குத்தூள் தேங்காய் துருவல் போட்டு நன்றாக கலந்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
கார இட்லி செய்முறை: மீதி பாதி இட்லியை உதிர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த வேர்க்கடலை, இஞ்சிப்பொடியுடன் வெங்காயம் பச்சை மிளகாய், மஞ்சள் தூள் போட்டு தாளித்து, வறுத்த எள், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு வதக்கிய பிறகு இறக்கவும். இந்த இரண்டு பொருளிலும் பச்சை வேர்க்கடலை வாசனையை வரும். ருசியாகவும் இருக்கும்.
தினமும் காலையில்,சாதாரண இட்லியை செய்து குழந்தைகளுக்கு தருவதை விட இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த இட்லி வகைகள் செய்து தந்தால் மிக ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.