முக அழகிற்கு எளிய குறிப்புகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10168
சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள் ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து 1 ஸபூன் தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் முக சருமம் பாதுகாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், மற்றொன்று எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.