Paristamil Navigation Paristamil advert login

 இஸ்ரேல் மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

 இஸ்ரேல் மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

12 ஐப்பசி 2024 சனி 07:43 | பார்வைகள் : 4724


வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - லெபனான் எல்லை மோதல்கள் நிலவி வந்த  நிலையில் கடந்த 23 ஆம் திகதி முதல், ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

லெபனானில் நடந்த மோதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

ஹிஸ்புல்லா போராளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேஜர்கள் உட்பட தகவல் தொடர்பு சாதனங்களை இஸ்ரேலின் அதிநவீன ரிமோட் வெடிப்பே இந்த மோதல்களுக்கு ஒரு முக்கிய காரணம் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்