Paristamil Navigation Paristamil advert login

ஈரான் ஜனாதிபதியை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 

 ஈரான் ஜனாதிபதியை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 

12 ஐப்பசி 2024 சனி 08:28 | பார்வைகள் : 5081


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

போருக்கான ஆயுதங்களை தெஹ்ரான் தொடர்ந்து வழங்குவது மற்றும் காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் போரை அதிகரிப்பது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விளாடிமிர் புடின் துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை  சந்தித்தார்.

இருநாடுகளின் தலைவர்களும் மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

"ஈரானுடனான உறவுகள் எங்களுக்கு முன்னுரிமை, அவை மிகவும் வெற்றிகரமாக வளர்ந்து வருகின்றன.

நாங்கள் சர்வதேச அரங்கில் தீவிரமாக இணைந்து செயல்படுகிறோம், மேலும் உலகில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய எங்கள் பார்வைகள் பெரும்பாலும் மிக நெருக்கமாக இருக்கும்" என புடின் கூறியுள்ளார்.

அத்துடன் மாஸ்கோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உலகளாவிய பிரச்சனைகளில் நெருங்கிய ஒத்துழைப்பையும், பெசெஷ்கியானை ரஷ்யாவிற்கு வருகை தருமாறும் புடின் அழைத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்