Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு எதிராக  பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் கண்டனம்

இஸ்ரேலுக்கு எதிராக  பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் கண்டனம்

12 ஐப்பசி 2024 சனி 08:48 | பார்வைகள் : 1182


பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள், லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரை குறிவைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் இரண்டு ஐ.நா அமைதிப்படையினர் காயங்களுடன் தப்பினர்.

அத்துடன் 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக அப்பகுதியில் அமைதிப்படையினரின் பிரதான தளத்தை இஸ்ரேல் தாக்கியது. 

இந்நிலையில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து அமைதிப்படையினரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

அத்துடன் உடனடியாக போர்நிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்