Paristamil Navigation Paristamil advert login

Piscine Molitor - சில அதிரி புதிரி தகவல்கள்..!!

Piscine Molitor - சில அதிரி புதிரி தகவல்கள்..!!

7 மாசி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19307


பரிசில் உள்ள பல சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள் குறித்து தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம் இல்லையா? இன்றைய பி.புதினத்தில் Piscine Molitor குறித்து பார்க்கலாம். 
 
இது ஒரு நீச்சல் தடாகம். பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த நீச்சல் தடாகம், பரிசில் உள்ள மிக பழமையான தடாகங்களில் ஒன்று. 
 
 
1929 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தடாகம், 1989 ஆம் ஆண்டு மூடப்பட்டது. பின்னர் AccorHotels குழுமம் இதனை வாங்கிக்கொண்டி, 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இதனை புதிதாக திறந்தது. 
 
33 அடி நீள உள்ளூர் நீச்சல் தடாகமும், 50 மீற்றர் வெளிப்புற நீச்சல் தடாகமும் கொண்டுள்ளது. 
 
மார்ச் 27 ஆம் திகதி, 1990 ஆம் ஆண்டு இந்த நீச்சல் தடாகம் 'வரலாற்றுச் சின்னம்' என பிரகடனப்படுத்தப்பட்டது. (அச்சமயத்தில் நீச்சல் தடாகம் பயன்பாடற்று மூடப்பட்டிருந்தது)
 
உங்களுக்குத் தெரியுமா.. ?? தற்போது இது ஒரு நான்கு நட்சத்திர நீச்சல் தடாகம் ஆகும். 
 
இந்த நீச்சல் தடாகத்தில் தான் <<Life of Pi>> நாவல் உருவானது. அது குறித்த தகவல்களை நாளை பார்க்கலாம். 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்