சக்திவாய்ந்த 6,600mAh பற்றரி திறன்: செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அம்சத்துடன் வெளியாகும் Honor X60!
12 ஐப்பசி 2024 சனி 11:58 | பார்வைகள் : 972
Honor தனது புதிய முக்கியமான ஸ்மார்ட்போன்கள் தொடரான Honor X60-ஐ அடுத்த வாரம் புதன்கிழமை, அதாவது அக்டோபர் 16ம் திகதி வெளியிட உள்ளது.
Honor X60 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் வெளியான Honor X60i-ஐ விட உயர்நிலை விருப்பங்களை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Honor தனது புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தற்போது வெளிப்படுத்தியுள்ளது, அதிக முக்கியமானதாக Honor X60-யின் பற்றரி பார்க்கப்படுகிறது.
"Honor Qinghai Lake" என்று அழைக்கப்படும் இந்த பற்றரி 6,600mAh திறன் கொண்டது.
இதன் மூலம் Honor X60 ஸ்மார்ட்போன் 2 நாட்கள் பற்றரி ஆயுளை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டின் முக்கிய ஸ்மார்ட்போன்களான Honor X50, X50 GT மற்றும் X50 Pro ஆகியவற்றின் 5,800mAh பற்றரிகளுடன் 35W சார்ஜிங் அம்சத்தில் இருந்து ஒரு பெரிய அதிகரிப்பு ஆகும்.
ஆனால் Honor தனது புதிய X60 ஸ்மார்ட்போன் தொடரின் சார்ஜிங் அம்சங்களை இன்னும் உறுதிப்படுத்த வேண்டியது உள்ளது.
சமூக ஊடகங்களில் கசிந்த புகைப்படங்களின் அடிப்படையில், Honor X60 ஸ்மார்ட்போன் 5,800mAh பற்றரி மற்றும் 35W சார்ஜிங் அம்சத்தை மட்டுமே கொண்டிருக்கும் என்றும், Honor X60 Pro-யில் மட்டுமே 6,600mAh பற்றரி திறன் கிடைக்கும் என்பதை தெரியவருகிறது.
Honor நிறுவனம் மேலும் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளது, அதில் Honor X60 ஸ்மார்ட்போன் செயற்கைக்கோள் தகவல் தொடர்பை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரைகள் 3,840Hz உயர் அதிர்வெண் PWM டிம்மிங்கை (dimming) பயன்படுத்தும் என்று தெரிய வருகிறது.
Honor X60 அடுத்த வாரம் வெளியிடுவதற்கு முன் அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெளியிட்டு பட்டியலில் Honor X60 மற்றும் Honor Tablet GT Pro ஆகியவை அதிகாரப்பூர்வ பட்டியல்களில் காணப்பட்டன.