Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : குழு மோதலில் சிறுவன் பலி.. ஒருவர் உயிருக்கு போராட்டம்..!!

Aulnay-sous-Bois : குழு மோதலில் சிறுவன் பலி.. ஒருவர் உயிருக்கு போராட்டம்..!!

12 ஐப்பசி 2024 சனி 13:58 | பார்வைகள் : 6272


Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் உயிருக்கு போராடும். நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று ஒக்டோபர் 11, வெள்ளிக்கிழமை இச்சம்பவம் அங்குள்ள துரித உணவத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது. திடீன அங்கு ஒன்றுகூடிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். 

அதில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காக்கி கொல்லப்பட்டுள்ளான். அதே வயதுடைய மற்றுமொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்