மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு புத்தக கடல்...!!

4 மாசி 2020 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 21782
நீங்கள் ஒரு புத்தக பிரியர் என்றால், பரிசில் உள்ள இந்த இடம் குறித்து நீங்கள் அறிந்து தான் இருப்பீர்கள்... அப்படி அறியாதவர்களுக்கு இதோ... இன்றைய பிரெஞ்சு புதினம்.
<<Bouquinistes>> என அழைக்கப்படும் இந்த கடைத்தொகுதி முழுக்க முழுக்க புத்தகங்களாலானது.
அனைத்தும் பழைய பொக்கிஷங்கள். புத்தகம் வாசிக்கும் உங்களுக்கு வாசித்த புத்தகங்களை தூக்கி வீச மனம் வராதல்லவா?? அதேபோல் பொக்கிஷங்களாக சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு உண்டு.
வேறு புத்தக விற்பனை நிலையங்களில் வாங்கும் அதே புத்தகத்தை இங்கு பாதி விலையில் நீங்கள் வாங்கலாம்.
Fitzgerald, Hemingway, Man Ray என 19 ஆம் நூற்றாண்டின் ஜாம்பவான்களின் புத்தகங்கள் எல்லாம் இங்கே இறைந்து கிடக்கின்றன.
இந்த கடைத்தொகுதியில் மொத்தம் அனுமதி பெற்ற 217 கடைகள் உள்ளன.
சென் நதியின் ஓர நடை பாதையை பிடித்துக்கொண்டு நீளத்திற்கு விரிந்து கிடக்கும் இந்த கடைத்தொகுதி மொத்தம் 3 கி.மீ தூரத்திற்கு உள்ளது.
300,000 இற்கும் குறையாத புத்தக கடல் இங்கு உள்ளது. பறந்து வாருங்கள் ஐந்தாம் வட்டாரத்திற்கு..!!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1