பேராசிரியர் Samuel Paty படுகொலை! - அஞ்சலி!!
13 ஐப்பசி 2024 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 8294
நான்கு வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியர் Samuel Paty இன் நினைவு நாள் இன்று Éragny-sur-Oise (Val-d'Oise) நகரில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
47 வயதுடைய பேராசிரியர் Samuel Paty, 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று Éragny-sur-Oise (Val-d'Oise) நகரில் வைத்து 18 வயதுடைய Abdoullakh Abouyezidovich Anzorov என்பவனால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அவர் கொல்லப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், Éragny-sur-Oise நகரில் அவருக்கான இரங்கல் கூட்டம் இடம்பெற்றது. ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலர் அங்கு ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.
நாளை திங்கட்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி பாடசாலைகளிலும் ஒரு நிமிட அகவணக்கம் அனுஷ்ட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் Arras (Pas-de-Calais) நகரில் வைத்து Dominique Bernard எனும் பேராசிரியர் இதேபோன்ற ஒரு கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan