Kirk புயல் பாதிப்பு.. துப்பரவு பணிகள் தீவிரம்..!
14 ஐப்பசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 1758
Kirk புயல் காரணமாக Seine-et-Marne மாவட்டம் பெரும் சேதத்தினை சந்தித்துள்ளது. வியாபார நிலையங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கையை பாதித்திருந்தது. தற்போது வெள்ளம் வடிந்து நிலமை ஓரளவு சீரடைந்துள்ளது. துப்பரவுப்பணிகள் முழு மூச்சாக இடம்பெற்று வருகிறது.
தீயணைப்பு படையினர், காவல்துறையினர் பல தன்னார்வத்தொண்டு நிறுவன ஊழியர்கள் என பலர் இணைந்து இந்த துப்பரவு பணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் வீதிகளை துப்பரவு செய்து வருகின்றனர். குறிப்பாக முற்று முழுதாக வெள்ளம் மூடிய Crécy-la-Chapelle நகரில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த துப்பரவு பணியில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது.
வீதிகளில் இருந்த குப்பைகூழங்களை வெள்ளம் அடித்துக்கொண்டு சென்று கடைகளுக்குள் நிரப்பியதாக கட்சிக்காரர் ஒருவர் தெரிவித்தார். சிலரது வீடுகளில் உள்ள குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.