Paristamil Navigation Paristamil advert login

Château d'Eau - பரிசில் பழமையை பறைசாற்றும் மெற்றோ நிலையம்..!!

Château d'Eau - பரிசில் பழமையை பறைசாற்றும் மெற்றோ நிலையம்..!!

3 மாசி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 18111


பரிசில் உள்ள ஒவ்வொரு மெற்றோ நிலையங்களும் ஒவ்வொரு கதையினை கொண்டது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Château d'Eau மெற்றோ நிலையம் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்..
 
1908 ஆம் வருடம் இந்த நிலையம் திறக்கப்பட்டது. இல்-து-பிரான்சுக்குள் உள்ள 302 மெற்றோ நிலையங்களில் 119 ஆவது 'பிஸி'யான மெற்றோ நிலையம் இது. 
 
1978 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம்ந திகதி இந்த மெற்றோ நிலையம் <<monument historique>> (வரலாற்றுச் சின்னம்) ஆக பிரகடனப்படுத்தப்பட்டது. 
 
2013 ஆம் ஆண்டில் இந்த மெற்றோ நிலையத்தில் 4,059,164 பேர் பயன்படுத்தியிருந்ததாக பதிவேடு தெரிவிக்கின்றது. 
 
Boulevard de Strasbourg எனும் வீதியில் இந்த நிலையம் உள்ளது. பின்னர் அந்த வீதியை விட மெற்றோ நிலையம் மிகுந்த பரபரப்பானதால் Rue du Château d'Eau என வீதியின் பெயரை மாற்றிவிட்டார்கள். 
 
இந்த மெற்றோ நிலையம் பரிசில் உள்ள மிக பழமையான நிலையங்களில் ஒன்றாகும். நிலையத்துக்குள் நுழையும் போதே இதன் பழமையை 'பளிச்' என உங்களால் உணர முடியும். 
 
அதே பழமையை நிலையத்துக்கு அருகே உள்ள Le Château d’Eau தேநீர் விடுதியிலும் காணலாம். 
 
*
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்