ஒரே கிக்கில் தலைகளை தாண்டி சென்று கோல்! இங்கிலாந்திடம் அடிபணிந்த பின்லாந்து அணி
14 ஐப்பசி 2024 திங்கள் 08:59 | பார்வைகள் : 769
பின்லாந்து அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தேசிய லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பின்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் Jack Grealish கோல் அடிக்க இங்கிலாந்து அணி முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
எனினும் இரண்டாம் பாதி ஆட்டம் சூடுபிடித்தது. 59வது நிமிடத்தில் இங்கிலாந்தின் Rice கிக் செய்த பந்தை பின்லாந்தின் கோல் கீப்பர் Lukas Hradecky பாய்ந்து பிடித்து மிரட்டினார்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 74வது நிமிடத்தில் Free Kick வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸாண்டர் அர்னால்டு கோல் அடித்தார்.
அவர் கிக் செய்த பந்து எதிரணி வீரர்களை தாண்டிச் சென்று வலைக்குள் விழுந்தது. ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் டெக்லான் ரைஸ் (Declan Rice) நேர்த்தியாக பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
அதற்கு பதிலடியாக கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை பின்லாந்து வீரர் Arttu Hoskonen (87வது நிமிடம்) தலையால் முட்டி கோலாக்கினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து 15 ஷாட்களும், பின்லாந்து 13 ஷாட்களும் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.