Paristamil Navigation Paristamil advert login

மனித ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க் - அதன் விலை எவ்வளவு தெரியுமா..?

மனித ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க் - அதன் விலை எவ்வளவு தெரியுமா..?

14 ஐப்பசி 2024 திங்கள் 09:05 | பார்வைகள் : 3671


அமெரிக்காவில் அனைத்து பணிகளையும் செய்யும் மனித ரோபோக்களை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மனிதர்களுக்கு சிறந்த நண்பராக இருக்கும் வகையிலான ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.

அவரது நிறுவனத்தின் இந்த ரோபோக்கள் வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மனித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.   

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், "இந்த மனித ரோபோக்களால் நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவட்டால் பேச முடியும், நடனமாட முடியும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடியும். நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்ல முடியும்.

மேலும் தோட்ட வேலைகள், வீட்டை சுத்தம் செய்தல், கடைக்கு சென்று சாமான்கள் வாங்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்யும். மனிதர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும் இந்த ரோபோவின் விலை 20,000 முதல் 30,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்" என தெரிவித்துள்ளார்.     

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்