பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை Catch செய்த மஸ்கின் Space X - விண்வெளி ஆய்வில் சாதனை
14 ஐப்பசி 2024 திங்கள் 09:08 | பார்வைகள் : 730
Space X நிறுவனம் ஏவிய ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதன் மூலம் விண்வெளி ஆய்வில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் Space X நிறுவனம் ராக்கெட்டின் தயாரிப்பு செலவை குறைக்கும் வகையில் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட்டை தயாரித்து வருகிறது.
அதன்படி சோதனை முயற்சியாக சூப்பர் ஹெவி பூஸ்டர் எனும் Space Xயின் ராக்கெட்டை ஏவியது. ஆனால் அந்த ராக்கெட் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் மீண்டும் Space X நிறுவனம் தனது 5வது ஸ்டர்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள Space X ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த இரண்டரை நிமிடங்களில், விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது.
பின்னர் துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து, சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் வெற்றிகரமாக டெக்ஸாஸ் ஏவுதளத்திற்கு திரும்பியது.
அதனை 'மெக்காஸில்லா' எனும் பாரிய லான்ச்பேட் தனது 'சாப்ஸ்டிக்ஸ்' எனும் பிரம்மாண்ட கைகளால் Catch செய்தது. இது விண்வெளி ஆய்வில் பாரிய சாதனை ஆகும்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் Space X நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.