Sarcelles : துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!
14 ஐப்பசி 2024 திங்கள் 10:31 | பார்வைகள் : 2090
Sarcelles நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 10 - வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Sarcelles (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் அவரது நண்பர் ஒருவருடன் மகிழுந்து ஒன்றில் காத்திருந்த வேளையில், அங்கு வந்த ஆயுததாரிகள் , அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது நண்பர் காயமடையவில்லை என்றபோதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.