தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை; அக்.,16ல் சென்னையை மிரட்டப்போகும் பேய்மழை!!
14 ஐப்பசி 2024 திங்கள் 11:33 | பார்வைகள் : 1095
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 17ம் தேதி வரை மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பல இடங்களில் ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
15ம் தேதி
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், , தஞ்சை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும்.
அக்.,16ம் தேதி ரெட் அலெர்ட்
சென்னை, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி,பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி
திருவள்ளூர், ராணிப்பேட், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.