'சூர்யா 45' திரைப்படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!
14 ஐப்பசி 2024 திங்கள் 13:44 | பார்வைகள் : 1127
சூர்யாவின் 45வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா நடித்த 43ஆவது படமான "கங்குவா" வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, அவர் ’சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில், சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், அரிவாளில் விபூதி, குங்குமம் வைத்து, நடுவில் வேல் இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும், ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முதலாக சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இணையும் இத்திரைப்படம், ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பால் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.