Paristamil Navigation Paristamil advert login

Musée de l'Orangerie - ஓவியங்களில் ஓர் உலகு..!!

Musée de l'Orangerie - ஓவியங்களில் ஓர் உலகு..!!

29 தை 2020 புதன் 10:30 | பார்வைகள் : 18482


பரிசில் உள்ள பல முக்கியமான இடங்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றோம். இன்றைய பிரெஞ்சு புதினத்திலும் அப்படி ஒரு இடத்தை குறித்து தான் பார்வையிடப்போகின்றோம். 
 
பரிசில் உள்ள Musée de l'Orangerie எனும் இந்த கூடம், ஒரு ஒவிய அருங்காட்சியகம். மிக பரபரப்பான வாழ்க்கையில், மிக அமைதியான ஒரு சூழலில் வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் மிக ஆழமான கருத்துடைய ஓவியங்கள் இங்கு காட்சிக்கு உள்ளன. 
 
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிக சொற்பமே இருக்கும் இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் பெரும் கதை பேசுகின்றன. 
 
இங்குள்ள ஓவியங்கள் impressionist மற்றும் post-impressionist வகையைச் சேர்ந்தது. 
 
Water Lilies என அழைக்கப்படும் மிக நீண்ட ஓவியங்கள் கொண்ட எட்டு அறை உள்ளது. அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் மிக நீளமானது. 
 
Paul Cézanne, 
Henri Matisse, 
Amedeo Modigliani, 
Pablo Picasso, 
Pierre-Auguste Renoir, 
Henri Rousseau, 
Alfred Sisley, 
Chaim Soutine, 
Maurice Utrillo
 
மற்றும் பல ஜாம்பவான்கள் வரைந்த ஓவியங்களை சுவற்றில் பதித்துள்ளனர். 
 
இங்கு வரும் பார்வையாளர்கள் மிக நீண்ட நேரம் இந்த ஓவியங்களை உத்து பார்ப்பதை நீங்கள் அவதானிக்கலாம். உண்மை தான். இந்த ஓவியங்கள் அனைத்தும் உங்களை தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும்.
 
முகவரி : 
Place de la Concorde
75001 Paris
France
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்