இலங்கையில் எதிர்வரும் திங்கள் முதல் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு முடிவு
15 ஐப்பசி 2024 செவ்வாய் 07:40 | பார்வைகள் : 1830
இலங்கைக்கு அவசியமான 7 இலட்சத்து 50 000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்யவும் இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இணையவழி கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றில் தடை உத்தரவு உள்ளதாகவும், அது தொடர்பில் விலைமனு கோரப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு முடிந்ததும் அது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்