கைலியன் எம்பாப்பே மீது பகீர் குற்றச்சாட்டு...
15 ஐப்பசி 2024 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 770
கைலியன் எம்பாப்பேவுக்கு அதிராக வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் முற்றாக புறந்தள்ளியுள்ளார்.
ஸ்வீடன் நாட்டின் நாளேடான Aftonbladet வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எம்பாப்பே வியாழன் அன்று Bank ஹொட்டலில் உணவருந்திவிட்டு ஸ்டாக்ஹோமில் உள்ள இரவு விடுதிக்கு நண்பர்களுடன் சென்றதாக Aftonbladet செய்தி வெளியிட்டுள்ளது.
Bank ஹொட்டலில் வைத்தே வன்கொடுமை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை தனியார் விமானம் ஒன்றில் எம்பாப்பே ஸ்வீடனை விட்டு வெளியேற, சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமது சமூக ஊடக பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்ட எம்பாப்பே, இது வெறும் போலியான தகவல் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுமார் 55 மில்லியன் யூரோ சம்பளம் தொடர்பில் தமது முன்னாள் அணி நிர்வாகத்துடன் போராடி வரும் நிலையில், இது போன்ற செய்திகள் எதிர்பார்த்தது தான் என பதிவிட்டுள்ளார்.