இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உயிருக்கு ஆபத்து

15 ஐப்பசி 2024 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 10915
ஈரானுக்காக நாசவேலையில் ஈடுபட்டதாக ஒரு இஸ்ரேல் தம்பதி கைது செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஈரானுக்காக நாசவேலையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் தம்பதியரை இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
Vladislav Victorson (30) என்னும் இஸ்ரேலிய குடிமகனை ஈரான் உளவுத்துறையினர் தொடர்புகொண்டதும், அவர் தனது மனைவியான Anna Bernstein மற்றும் இன்னொரு நபருடைய உதவியுடன் கார்களுக்கு தீவைப்பது, சுவர்களில் சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதுவது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை அச்சடிப்பது முதலான விடயங்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.
அதற்காக அவர்களுக்கு சுமார் 5,000 டொலர்கள் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல் என்னவென்றால், இந்த தம்பதியர் இஸ்ரேலின் முக்கியமான நபர் ஒருவரைக் கொல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களுடைய குறி, இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே நெதன்யாகுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில், இந்த தம்பதியரின் கைது சம்பவத்தால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1