பரிசில் ஒரு அற்புத நீச்சல் தடாகம்..!!
27 தை 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19538
பரிசில் பல இடங்களில் நீச்சல் தடாகங்கள் உள்ளன. கடற்கரை காணமுடியாத பரிசில் இந்த நீச்சல் தடாகங்கள் தான் நீந்துவதற்கு வாய்பை ஏற்படுத்தி தருகின்றன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதேபோன்ற ஒரு நீச்சல் தடாகத்தை பற்றித்தான் பார்க்கப்போகின்றோம்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள 'Piscine Joséphine Baker' மிதக்கும் நீச்சல் தடாகம் தான் அது.
ஏன் மிதக்கும் நீச்சல் தடாகம் என்கின்றோம் என்றால், இது முழுக்க முழுக்க செயற்கையானதல்ல. சென் நதியின் மேல் இந்த தடாகத்தை அமைசத்துள்ளன.
25 மீற்றர் நீளமும், 10 மீற்றர் அகலமும் கொண்ட மிகப்பெரிய தடாகம் இது. கிட்டத்தட்ட அனைத்து விதமான நீச்சல்களுக்கும்/ நீச்சல் விளையாட்டுக்களுக்கும் பொருத்தமான தடாகம் தான் இது.
சரி, இது ஏன் இத்தனை வரவேற்பை பெற்றுள்ளது.??! இந்த நீச்சல் தடாகத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள கூரை.
குறிப்பாக கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவும் வேளையில் இந்த கண்ணாடிகளால் ஆன கூரை வழியாக வெளிச்சம் தண்ணீரின் பட்டுத் தெறிக்கும் அழகை நீங்கள் நேரில் சென்று தான் பார்க்கவேண்டும்.
மிக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட இந்த தண்ணீரில் நீச்சல் விளையாடுக்கள் பெரும் வரப்பிரசாதமே.
குறிப்பாக கோடை காலங்களில் இங்கு பல நீச்சல் விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இவ்வருடத்தின் கோடை காலத்தில் இங்கு செல்ல மறக்காதீர்கள்..!!
என்ன ..? கட்டணம் எவ்வளவா?? சாதாரண நாட்களில் €3.80 ஆகவும், கோடை காலத்தில் €6.50 ஆகவும் உள்ளது கட்டணங்கள்.
அடுத்து நீங்கள் என்ன கேட்கப்போகின்றீர்கள் என புரிகிறது. இதோ உள்ளது முகவரி : Quai François Mauriac - 75013 Paris.