கொரிய வீதிகளை தகர்த்திய வட கொரியா...
15 ஐப்பசி 2024 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 1799
வட கொரியா தனது பகுதியை தெற்குடன் இணைக்கும் வீதிகளின் பல பகுதிகளை செவ்வாயன்று 15 வெடித்துச் சிதறிடித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்கொரியா,
வட கொரிய இராணுவம் கியோங்குய் மற்றும் டோங்ஹே வீதிகளின் இணைப்பை துண்டிக்கும் நோக்கில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது.
எனினும், இதனால் தமது இராணுவத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
வட கொரிய இராணுவத்தின் நடவடிக்கைகளை இராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது மற்றும் தென் கொரியா-அமெரிக்க ஒத்துழைப்பின் கீழ் பலப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்கு மத்தியில் உறுதியான தயார்நிலையை பராமரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம், வட கொரியாவின் பிராந்தியத்தை தென் கொரியாவிலிருந்து முற்றிலும் பிரிக்கும் திட்டத்தை பியோங்யாங் இராணுவம் அறிவித்தது.
வடகொரியா வீதிகளை தகர்க்க தயாராகி வருவதாக திங்களன்று தென்கொரியாவை எச்சரித்தும் இருந்தது.
கொரிய பகுதிகள் கியோங்குய் கோட்டுடன் வீதிகள் மற்றும் ரயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன, இது தெற்கின் மேற்கு எல்லை நகரமான பாஜுவை வடக்கின் கேசோங்குடன் இணைக்கிறது.