Paristamil Navigation Paristamil advert login

ஆணாதிக்கம் உள்ள நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறுகிறதா?

ஆணாதிக்கம் உள்ள நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறுகிறதா?

15 ஐப்பசி 2024 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 1132


பிக்பாஸ் வீட்டில் வார வாரம் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் வெற்றி பெற்று சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. இதில் தங்களிடம் உள்ள பணத்துக்கு அதிகமாக ஆண்கள் அணியினர் பர்சேஸ் செய்ததால் அவர்களுக்கு இந்த வாரத்திற்காக ஷாப்பிங் செய்த மளிகை பொருட்கள் வழங்கப்படாது என பிக்பாஸ் அறிவித்தார். மறுபுறம் பெண்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கம்மியாக பர்சேஸ் செய்ததால் அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் கிச்சன் ஆண்கள் அணியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு சென்று சமைக்கவோ அல்லது இதர வேலைகளை செய்யவோ ஆண்கள் அணியினரை கேட்டுவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். அப்படி அனுமதி கேட்கும் போது அவர்களுக்கு ஆண்கள் அணியினர் சில டாஸ்குகளை கொடுப்பது வழக்கம். அப்படி கடந்த வாரம் வரை பாட்டுபாட சொல்லியும், நடனமாட சொல்லியும் டாஸ்க் கொடுத்து வந்த நிலையில், தற்போது அவர்கள் கொடுக்கும் டாஸ்க் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

அதன்படி ஆண்கள் அணியை சேர்ந்த முத்துக்குமரன், பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின், சாச்சனா ஆகிய இருவரை மட்டுமே சமைக்க அனுப்புவோம். அப்படி செல்வோர் சமைப்பது மட்டுமின்றி ஆண்கள் அணியினர் சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவ வேண்டும் இந்த டாஸ்குக்கு சம்மதித்தால் தான் சமைக்க அனுப்புவோம் என கூறியதை கேட்டு கோபமடைந்த பெண்கள் அவரிடம் வாக்குவாதம் செய்யும் புரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதில் சாச்சனா, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கண்ணீர்விட்டு அழுகிறார். இப்படி பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக ஆண் போட்டியாளர்கள் விளையாடி வருவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ஆணாதிக்கம் உள்ள நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்