Paristamil Navigation Paristamil advert login

RER சேவையாக மாற்ற முனைந்த 13 ஆம் இலக்க மெற்றோ..!!

RER சேவையாக மாற்ற முனைந்த 13 ஆம் இலக்க மெற்றோ..!!

22 தை 2020 புதன் 10:30 | பார்வைகள் : 21018


இன்றைய பிரெஞ்சு புதினத்தில் 13 ஆம் இலக்க மெற்றோ குறித்து ஒரு சுவாரஷ்யமான தகவல் ஒன்றை பார்க்கலாம்.
 
இன்று இல்-து-பிரான்சுக்குள் மிக முக்கியமான ஒரு மெற்றோ சேவையாக 13 ஆம் இலக்க மெற்றோ உள்ளது. ஆனால் அந்த சேவையை இடையில் நிறுத்த ஒருதடவை திட்டமிடப்பட்டது. 
 
RER சேவைகளில் தேவை மிக அதிகமாக தேவைப்பட்டதால், 1965 ஆம் ஆண்டு இந்த 13 ஆம் இலக்க மெற்றோ சேவையை அப்படியே RER சேவையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. 
 
ஆனால் பரிசின் வடக்கு பிராந்தியத்தை விட, மேற்கு புறநகர்களில் Asnières-sur-Seine,  Gennevilliers, Clichy, Saint-Denis மற்றும் 
Saint-Ouen-sur-Seine ஆகிய நகரங்களில் வசிக்கும் மக்கள் அதிகளவில் இந்த 13 ஆம் இலக்க மெற்றோவில் பயணிப்பதால், இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 
 
இன்று 13 ஆம் இலக்க மெற்றோ 32 நிலையங்களில் பயணிக்கின்றது. 2017 ஆம் ஆண்டில் 131.4 மில்லியன் பயணிகள் இதில் பயணித்துள்ளனர். 
 
அன்று மட்டும் அந்த சேவையை நிறுத்தியிருந்தால், இன்று பெரும் போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டிருக்கும்..;)  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்